பெண் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவை ஓடிவந்து தானம் செய்த மை தர்மபுரி குழு ரத்ததான கொடை வள்ளல்கள்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு அவசர சிகிச்சைக்காக பி பாசிட்டிவ் ரத்தம் தேவை என்ன மை தருமபுரி குழுவினருக்கு தகவல் வந்ததையடுத்து. உடனடியாக தகவல் அறிந்த தன்னார்வலர் சதீஷ்குமார் அவர்கள் ரத்த தானம் அளித்தார். மேலும் தர்மபுரி பாலக்கோடு ராஜேந்திர மருத்துவமனையில் பெண் ஒருவரின் சிகிச்சைக்காக ஏபி பாசிட்டிவ் இரத்தம் தேவைப்படுகிறது என்று மை தர்மபுரி குழுவிற்கு தகவல் வந்தையடுத்து உடனடியாக தகவலறிந்த தன்னார்வலர் பாலகிருஷ்ணன் அவர்கள் ரத்ததானம் செய்தார். குழுவில் தகவல்கள் பகிரப்பட்ட உடனே தகவலறிந்து ஓடி வந்து இரத்ததானம் செய்த 2 இரத்தக் கொடை வள்ளல்களையும் .ஏற்பாடு செய்த மை தர்மபுரி சதீஸ் அவர்களையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்