மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டரின் தாயாருக்கு கொரோனா தொற்று
" alt="" aria-hidden="true" />
மதுரையில் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் பணிவிடை செய்யும் பட்டரின் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கோவில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெற்று வருகின்றன. தானப்ப முதலி தெருவை சேர்ந்த சரவணன் பட்டரின் தாயாருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று அறி குறி தென்பட்டது இன்று 23 - 4 - 2020 அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட தகவலின் பெயரில் சரவணன் பட்டர் அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் வசித்த தெரு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தானப்ப முதலி தெரு முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. கோவிலில் பணிவிடை செய்த அனைத்து பட்டார்கள் கோவில் ஊழியர்கள் மற்றும் பணியில் இருந்த காவலர்கள் அனைவருக்கும் தற்பொழுது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
உலக வரலாற்றில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுர வீதிகளும் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மதுரை சுகாதார துறையினருக்கு போர்முனை சார்பில் ஒரு சிறிய வேண்டுகோள் கிருமி நாசினி தொற்று உள்ள இடங்களில் மட்டும் தெளிப்பதோடு விடாமல் அனைத்து பகுதிகளிலும் தினசரி தெளிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.