அச்சிறுபாக்கம் வாரசந்தை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம்

அச்சரப்பாக்கம் வார சந்தையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் ஆட்சிஸ்வரன் திருக்கோவிலுக்கு சொந்தமான வாரச்சந்தை இதன் பரபரப்பளவு 

20 ஏக்கர் ஆனால் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கும் வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

அது மட்டும் அல்லாமல் சந்தை பகுதிக்கு முக்கியமாக திகழும் மாடு இறக்கும் தலம் இல்லாத காரணத்தினால் சர்வீஸ் சாலையில் மாடுகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

மேலும் சந்தைக்கு உள்ளே வரும் மாடுகளுக்கும் மற்றும் வெளியே செல்லும் மாடுகளுக்கும் 

50 ரூபாய் கட்டாய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வாரச்சந்தையில் 

10 வணிக வளாகம் மற்றும் 150 காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. 

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  இதன் வழியாகத்தான் செல்லும் நிலை உள்ளது, ஆனால் அச்சிறுபாக்கம் ஆட்சிஸ்வரர் கோவில் செயல் அலுவலரிடம் பலமுறை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது இதனால் வார சந்தை பகுதியில் இரவு நேரங்களில்  இருளில் மூழ்கி குற்ற சம்பவங்கள் நடப்பதால் அச்சிறுபாக்கம் பகுதிவாழ் மக்கள் சரமாரியாக குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து வாரசந்தை பகுதியை சீர் செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்